தத்துவ ஞான மார்க்கம்
🙏 துவாதசநாம சங்கீர்த்தனம்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
எண்சீர்க்கழி நெடி லடியாசிரியவிருத்தம்
1.பேச வாதிமறை நாலு மோர்விரகு
பேசி லாமைநனி பேசு பாதநம
கூச வானவர்கள் கூற யானுனடி
கூறு மாறுனருள் கூரு கோலாநம
தூச வாபரண மார மாலைதரு
சோபை மாதருட றூய்தில் பாதவரை
கேச வாதியென வேச வாய்மையருள்
கேச வாயநம கேச வாயநம
2.ஆராய வேதமுடி வானாத பாதநம
வாசாபி சாசமற வேயாளு பாதநம
சீராய வானவர்க டேவாதி தேவநம
தேனாரு பாதமலர் சீராக வோதுதொறு
நீராய வாணவரை நேர்காணு பாதநம
நீதான தாகுமென நேரோது மாசில் பொரு
ணாராய ணாயபத மாநாட வோதிநம
நாராய ணாயநம நாராய ணாயநம
3.வாத வாதரறி யாத பாதநம
மாகர் நாடரிய வேக பாதநம
வோது வாரறிய வேத நாலுமன
மோர்வு றாததென வோது பாதநம
சீத வாதவழல் சேரு மாதவர்கள்
சேரு மாறுனடி தேரு மாறருளி
மாத வாவிலழி வேனை யாளுநம
மாத வாயநம மாத வாயநம
4.தாரம் போதுபொரு டானென் றோதிநம
தாரம் பாலர்பலர் சார்பென் றோதிநம
வீரம் போதுதலை மீதந் தாளுநம
வேகம் போதிலெரி மாகங் காலவனி
நாரம் போதகனு மாவிங் கோதிநம
ஞானம் போயழிய நாசஞ் சேரியநம
கோரம் போகவெனை யாளுங் கோல நம
கோவிந் தாயநம கோவிந் தாயநம
5.கட்ட மாம்வினை கைத்த தாணம
கத்தும் வாதியர் கைப்ப டாய்நம
விட்ட மானவர் பத்தி யாய்நம
வெற்றி யாளவல் வித்த காநம
வெட்டு மாவுரு வத்த னேநம
வெட்டொ ணாவரு வத்த னேநம
வெட்ட மாவர கிட்டு வாய்நம
விட்டு வேநம விட்டு வேநம
6.பிறைசூடு வோனுமரி பிரமாவு மாதிநம
பெருவான மாதிநில வரைநாச காரிநம
துறைகூறு வாதருள மிருளான பாதநம
சுரூபாவெ னாவுருகு மவர்காணு சோதிநம
வறைகூவி நாயனைய வெனையாளு பாதநம
வமரேச ராலுமறி வரிதாய பாதநம
மறைசூடி காபரண வணியான பாதநம
மதுசூத னாயநம மதுசூத னாயநம
7.புரையற்றி யாவையினு நிலையுற்ற பாதநம
புகழுற்ற தோறுமுடல் புளகித்து ணேயமொரு
கரையற்ற மாதவர்க டமைகைத்த லாமலக
கனியொக்க நாடிமிகு களியுற்ற பாதநம
வுரையற்ற தாயுமறை யுணர்விற் படாததென
வொழிவற்ற சோதிவர வழியிட்ட வீரநம
திரையற்ற வார்கலிய தெனவைத்த பாதநம
திரிவிக்ர மாயநம திரிவிக்ர மாயநம
8.சோம னாதிசுடர் பூமு னாயபொரு
டோமி லாதவுயிர் தோறு மேவிநம
நாம நாடுருவம் யாவு மாகியொரு
நாம ரூபமறு நாத பாதநம
தாய்மு னாகிவரு சார்பி யாவுநின
தாள லாதறிவி லாத தாபதர்கள்
வாய்ம னாலயம்வி டாத சோதிநம
வரம னாயநம வாம னாயநம
9.வேத ராகியுடன் வீடு சேரும்வகை
மேவு மாதரவி னார்க ளாயகில
பூத ராலும்வழி பாடு மேவுமிரு
போதெ னாவுமுரை யாடு மாயநம
மாத ராதலம வான நாடர்தொழு
மாக ராசர்பத மாய்வி லாமையிலை
சீத ராதரவில் வீத ராகரறி
சீத ராயநம சீத ராயநம
10.கழல்சூடு வாரிதய கமலால யாயநம
கலிகாலன் வாயின்மணை யிடுகால காலநம
வழல்சேர்மு னேயழியு மெழுகாக வேயுருகு
மடியார்க டாமறிய வுளதான பாதநம
குழல்சேரு மாறின்மொழி மடவார்கள் காதன்மிகு
கொடியேனை யாளவொரு குருவான கோலநம
வெழில்சேரு மாமுனிவர் தொழுமாதி நாதநம
விருஷிகேச வாயநம விருஷிகேச வாயநம
11.சித்தரா னார்களறி சிற்பிரகா சாயநம
செற்றமார் வாதின்மயல் செற்றதா டாளநம
மத்தரா யோதுபத கத்தில்வா தேயொழிய
மற்றிலா தாரமருள் வைத்தமா மாயநம
நித்தமா வேவல்செய்து நிற்கநே ராதுனடி
நித்தமா மேவல்செய்து நிற்கமா லாகுமதி
பத்தரா னார்கள்பெறு பத்மபா தாயநம
பத்மநா பாயநம பத்மநா பாயநம
12.ஆமூதை தீயவனி யாகாச மாகிநம
வானாலு நீமுழுது மாகாத சோதிநம
சீமூத வாகனன்மு னாம்வானு ளோர்பரவு
தேவேச ராலுமறி வாகாத தேசநம
மாமூது நான்மறைகள் வாசாம கோசரமென்
வாடாத பாதமலர் வாயார வோது தொறுந்
தாமூது காரமென லாநேசர் சார்புநம
தாமோத ராயநம தாமோத ராயநம
கட்டளைக்கலித்துறை
கேசவனாரா யணன்கிளர்மாதவன் கேடொன்றிலாத்
தேசமர் கோவிந்தன் விட்டுமதுத்திரி விக்கிரமன்
வாசமுன்வாமனன் சீதரன்மன்னு மிருடிபத்ம
னாசமிறாமோ தரனுருவாய் நின்ற நாமங்களே