தத்துவ ஞான மார்க்கம்

🙏 நமஸ்கார சங்கீர்த்தனம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அறுசீர்க்கழிநெடி லடியாசிரியவிருத்தம்

1.மயக்குறு மாயையி னால்விழி மறைத்தலி னாலறி யேன்வழி

துயக்குறு நீள்வினை யாகிய துயர்க்குழி நான்ணு காவண

மியக்கற வேயரு ளாம்விழி யெனக் கரு ளாலரு ளாயுறு

தியக்கற வேதெளி வாய்திகழ் சிவப்பிர காசந மோநம


2.கணத்தினி லேபவ மாகிய கடற்றுயர் போயழி யா விடப்

பிணத்திணை யேனழி யாவகை பிடித்தெனை யான்பெரு வேதிய

குணத்தினை யேதுமி லாயருள் குறித்திடு சீரடி யார்தம

தெணத்தினி லேதெளி வாய் திகழ் சிவப்பிர காசந மோநம


3.இருக்கொடு மால்பிர மாதிக ளிளைத்தய ராவுற வாடி டக்

கருக்குழி யேசர ணாயுழல் கடைப்புலை யாமெனை யாளிட

வுருக்கொடு தானெதி ரேமனி யுளத்தினி லேகல வாவுறு

திருக்கற வேதெளி வாய்திகழ் சிவப்பிர காசந மோநம


4.நடத்தின னேயுல கோடுயிர் நவிற்றிடு பேதமு மாயவை

கடத்தின னேவிளை யாடிடு கருத்தினை யாரறி வாரெனை

யடர்த்திடு மாயையி னாருயி ரறப்பறி யாவுள மேமனு

திடத் தின னேதெளி வாய்திகழ் சிவப்பிர காசா நமோநம


5.இளைத்திட மாதவர் தாமின மிகத்தினின் மானுடனா யெனை

வளைத்தரு ளாம்வலி யாலுற வணக்கியென் மா மயல் வேரற

விளைத்தலி லாவிளை வாகிய விழுப் பொரு ளேயடி யாரவர்

திளைத்திடு மாரமிழ் தேதிகழ் சிவப்பிர காசா நமோநம


6.கதற்றத லானல மேதுமில் கலைக்கட லூடலை யாவ கை

யிதத்தொரு மாமொழி யால்வெறு மிமைப்பொழு தேமுடி வோதியென்

மதத்தெழு மாமன மாகிய மருட்கரு வோடழி வாம்வகை

சிதைத்துள மேதெளி வாய்திகழ் சிவப்பிர காசந மோநம


7.வகுத்தனை வான்முதல் பூதமு மயக்குறு மூனதும் வேறெனப்

பகுத்தவை தோறுளை யாயொரு பகிர்ப்ப திலாத பராபர

தொகுத்துல கோடுயிர் தேர்பர துவக்கினை யானணு காவகை

செகுத்துள மேதெளி வாய்திகழ் சிவப் பிர காசந மோநம


8.மறுத்தன னானுன தாரருண் மருட்டிற மாமதி கேட திற்

பொறுத்திட லேபெரி யோர்கடன் புரைத்திற மேதுமி லாவகை

யறுத்திணை யாரடி நீழலி லமைத்தழி யாவறி வாமுனைச்

செறித்திடு வாய்தெளி வாய்திகழ் சிவப்பிர காசந மோநம


9.அருத்தியி னோடடி யார்பணி யமைத்துள நாளடி யேனினி

கருத்துரை காயமு நேர்படக் கலக்கற வேசெயு மாறரு

ளொருத்தியை யாகம தாவமைத் தொருக்கிய யோகுணர் வாயெனைத்

திருத்திய தேவர்க டேவநற் சிவப்பிர காசந மோநம


10.விரித்தனை வேதமொ டாகமம் விளைத்தனை போகமும் வீடதுந்

தரித்தனை யாவையு மாயவை சதுர்ப்பட வேகல வாவணம்

புரித்தனை நீபரி பூரண புலத்தய ராவழி வேனுயத்

திரித்துள மேதெளி வாய்திகழ் சிவப்பிர காசந மோநம