தத்துவ ஞான மார்க்கம்

🙏 சிவசங்கரம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

1.வினைமங்கிட விங்குரு வங்கொடு

வெறுமொன்றறி வின்றிய வென்றனை

நினைவங்கது வின்றி நிரந்தர

நெறியென்கண தெங்கு நிகழ்ந்திட

வினமின்றி யொருங்கி யவிழ்ந்திட

விருவென்றிறை வன்செய்த நன்செய

றினையுஞ்சக மென்பது மொன்றிலை

சிவசங்கர சங்கர சங்கர


2.பகலிங்கிர் வென்ப திறந்தொரு

படிநின்றொளிர் கின்ற பரம்பொரு

ளகநின்று திகழ்ந்திடு கின்றமை

யறிவங்கயர் வொன்ற தறும்படி

தகவிங்கிது கண்டுகொ ளென்றிறை

ரணந்தலை தந்திட முன்றிகழ்

செகநன்பர மங்குயி ரிங்கிலை

சிவசங்கர சங்கர சங்கர


3.சட வன்பிணி துன்ப தரஞ்செறி

தசைவன்பிணம் வன்கழு குண்டியிவ்

வுடலின்பம தென்றழி யும்பொரு

ளுடன்மங்கிடு மொன்றறி வின்றிய

சடனென்றன புன்றலை தன்றிகழ்

சரணந்திசை யெங்கு நிறைந்துள

திடம்வந்து தெளிந்து திகழ்ந்தது

சிவசங்கர சங்கர சங்கர


4.உலகங்களு மும்பர் பதங்களு

மொருவுந்திண மென்பது மொன்றற

நிலவும்பர னன்கழ றங்கிய

நிகழன்பர்த நெஞ்சு நிறைந்தது

கலகங்கொள் பவங்க ளிறந்தன

கரணங்க ளடங்க மடிந்தன

செலவுஞ்செய லன்றி யிருந்தது

சிவசங்கர சங்கர சங்கர


5.இதமங்கக மென்ப திறந்தன

விககன்பர மின்றி யொழிந்தன

விதமங்குறு வன்சம யங்களும்

வெறுமொன்றல தின்றி முடிந்தன

பொதுவொன்றற வெங்கு நிறைந்துள

புனிதன்கழ லெங்கு நிகழ்ந்தது

திதம்வந்து தெளிந்தொளிர் கின்றது

சிவசங்கர சங்கர சங்கர


6.விரதங்கட வங்கண் முடிந்தன

வினைவெம்பவ பந்தி செறிந்துள

கரமொன்றிய கங்குல் கழிந்தது

கரையின்றிய வின்பம் விளைந்தது

சரதந்தனை யன்றிய தொன்றுமி

றலைவன் சரணங்கள் சமைந்தென

சிரம்வந்து செறிந்து திகழ்ந்தது

சிவசங்கர சங்கர சங்கர


7.எவமன்றிய தொன்றறி வின்றிய

வெனையன்ப ரொடங்குற நன்றிசெய்

தவவன்பர்க டம்பர மன்றன

சரணங்களை யென்றலை தந்திட

நவமொன்றற வெங்கு நிறைந்துள

நயனந்திக ழின்ப நெடுங்கடல்

சிவநின்று திகழ்ந்திடு கின்றது

சிவசங்கர சங்கர சங்கர


8.இறைநன்கரு ளின்செய லென்சொல

வெழினன்கண மொன்றிலை யங்கதின்

மறையெங்கணு நின்று புகழ்ந்திடு

வளம் வந்து வரம்பதி றந்தது

வறிவங்கயர் வின்றி நிறைந்தென

வகநின்றமிழ் தம்பொழி கின்றது

சிறைவன்பவம் வெந்து விழுந்தது

சிவசங்கர சங்கர சங்கர


9.பனுநன்கலை யின்கண றைந்திடு

பருவங்கள் கழன்றொளிர் பங்கய

தனநன்கழ றன்றிக ழன்பர்க

டலையன்றியு மென்றலை தந்தொரு

வினமின்றிய வின்பம் விளைந்திட

விருவென்றிறை வன்செய்த விஞ்சையோர்

தினையும்புக லுந்திற மொன்றிலை

சிவசங்கர சங்கர சங்கர


10.புணியங்கண் மறங்கள் பொலிந்திடு

புலனங்கர ணங்கண் மடிந்தன

பிணிதங் கவ வென்பது தன்றிகழ்

பெருவன்குல சண்டை கழிந்தது

விணையின்றிய வின்பமெ னன்கழ

லிரவங்கொடு நண்பக லின்றியோர்

திணமங்கொழி வின்றொளிர் கின்றது

சிவசங்கர சங்கர சங்கர