தத்துவ ஞான மார்க்கம்

🙏 திருப்பல்லாண்டு

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள்வெண் செந்துறை

1.ஊன மொழித்துரை யொன்றாலே தானாக்கு

முத்தமற் குப்பல்லாண் டோத வாரீ

ருருவோ டருவாகி யன்றாகி யொன்றா

முணர்வினுக் குப்பல்லாண் டோத வாரீர்

ஞானமு ஞேயமு ஞாதுரு மாயல்லா

நாதருக் குப்பல்லாண் டோத வாரீர்

நல்ல சிவப்பிர காசற்குப் பல்லாண்டு

நாத்தழும் பப்போற்றி யோத வாரீர்


2.என்னே யெனையும் பொருளாக வாண்ட

வியல்பினுக் குப்பல்லாண் டோத வாரீ

ரிப்படி யென்னவொண் ணாவின்ப வெள்ளத்துக்

கெப்பொழு தும்பல்லாண் டோத வாரீர்

முன்னேயெல் லாமாய் முளைத்தன்றி நின்ற

முதன்மைக்குப் பல்லாண் டோத வாரீர்

முத்தி திருவாய் மொழியும் விரகற்கு

முப்பொழு தும்பல்லாண் டோத வாரீர்


3.கல்விக் கடலைக் கடக்கும் படிபார்த்த

கண்ணுக்குப் பல்லாண்டென் றோத வாரீர்

கற்போலு நெஞ்சங் கரைத்தாள வல்ல

கருணைக்குப் பல்லாண் டோத வாரீர்

செல்வத் திருக்கழல் சூட்டு மடியார்

திருவுக்குப் பல்லாண்டென் றோத வாரீர்

செய்ய சிவப்பிர காசற்குப் பல்லாண்டு

சித்தங் களிக்கநின் றோத வாரீர்


4.வாவென் றழைத்தென் சிரத்திற் கழல்வைத்த

வண்மையற் குப்பல்லாண் டோத வாரீர்

மாமறை தேடிட மானுட னாய்வந்த

வல்லவற் குப்பல்லாண் டோத வாரீர்

தாவில்லா மாலயன் றேடியுங் காணாத

தத்வற்குப் பல்லாண்டென் றோத வாரீர்

சாற்றுஞ் சடங்கெல்லாஞ் சாடிய கண்டற்குச்

சந்ததம் பல்லாண்டென் றோத வாரீர்


5.பந்தப் பெருங்கடல் பாழ்படப் பார்த்த

பரிசுக்குப் பல்லாண்டென் றோத வாரீர்

பாத மளித்த பரிசுக்குப் பல்லாண்டு

பல்லா யிரத்தாண்டென் றோத வாரீர்

சிந்தைப் பரப்பற மீட்டென்னைக் காட்டிய

செல்வற்குப் பல்லாண்டென் றோத வாரீர்

செய்ய சிவப்பிர காசற்குப் பல்லாண்டு

சித்தங் களிக்கநின் றோத வாரீர்


ஈற்றடிமிக்கு நான்கடியான்வந்த கலித்தாழிசை

6.மூர்த்திகண்மூ வருமறியா முழுமுதல்வந் தோரு ருவா

யார்த்தபெரும் பாசமெனு மாரிருள்வா யழி வேனுக்

கோர்த்துணரும் வகையருளி யொருநொடியிற் பிறப்பறவே

பார்த்தெனையாட் கொண்டவற்குப் பல் லாண்டு கூறுதுமே

பரவரிய நாதனுக்குப் பல்லாண்டு கூறுதுமே


7.நீங்காத பெருந்துயரா னெருக்கியெனைச் சுழற்றி யிடு

மாங்காரந் தவிர்த்திடவோ ராரியனா யெழுந்தருளி

யோங்காரத் துட்பொருளை யொருமொழியி னளித்தெனை யும்

பாங்காக வாண்டவற்குப் பல்லாண்டு கூறுதுமே

பத்திவலைப் பட்டவற்குப் பல்லாண்டு கூறுதுமே


8.மண்பாலப் பாதலர்பால் வானோர்பான் மற்றுமுள

வெண்பாலு மெய்தரிய பேரின்பம் யானெய்த

நண்பாக வந்தருளி நலலடியா ருடனெனையும்

பண்பாக வாண்ட வற்குப் பல்லாண்டு கூறுதுமே

பாராமற் பார்த்தவற்குப் பல்லாண்டு கூறுதுமே


9.மயலதனான் மறந்து பிறந் துழன்றிடுமிம் மதியிலி யேன்

பயமதெலாந் தீரவரு வானுருவா யெழுந்தருளி

நயமதுற வுட்புகுந்து ஞானகனப் பேரொளியாம்

பயனதுவாய் நின்றவற்குப் பல்லாண்டு கூறுதுமே

பத்தருயி ருண்டவற்குப் பல்லாண்டு கூறுதுமே


10.முத்தியுமுத் திப்பயனு முழுதுணர்மெய்ஞ் ஞான முமாஞ்

சித்தியுமச் செய்தவமு மாயசிவப் பிரகாச

னெத்தியெனை யாண்டுள்ளங் குடிகொண்டங் கெல்லை யிலாப்

பத்தியுமாய் நிறைந்தவற்குப் பல்லாண்டு கூறுதுமே

பராவமிழ்தாய் நிறைந்தவற்குப் பல்லாண்டு கூறுதுமே


11.செற்றமுட னார்வமதஞ் செறிகோப முலோபமெ னும்

பற்றதனாற் பவக்கடலுட் பதைத்துழன்று கழி வேற்கு

நற்பதமு நன்னெறியு ஞானமுமாந் தம்பதமே

பற்றதுவா வளித்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே

பால் புரைநீ றணிந்தார்க்குப் பல்லாண்டு கூறுதுமே


12.திருகலுறுந் திண்மனத்தைச் செப்படைவே திருத்தி யிட

வுருவருவ மொன்றுமிலா வுத்தமனா ரோருரு வாய்ப்

பெருகியவெம் பேதைமையாம் பிணிகெடுத்துப் பேரின்பப்

பருகமிழ்தாய் நிறைந்தவற்குப் பல்லாண்டு கூறுதுமே

பாமாலை யுகந்தவற்குப் பல்லாண்டு கூறுதுமே


13.போக்கினொடு வரவதுவாய்ப் பொன்றுமுடம் பளவாகி

நீக்கமிலா நெடுந்துயரா நீள்சுழிப்பட் டழி வேனை

யாக்கமுட னழிவதிலா வானந்த மாக்கியென் றன்

பாக்கியமாய் நிறைந்தவற்குப் பல்லாண்டு கூறு துமே

பார்முழுது முண்டவற்குப் பல்லாண்டு கூறு துமே


14.இகபரமா யெண்டிசையா யெல்லாமா யீறின் றிப்

பகவெனலாம் பகிர்ப்பறவே பணைத்தல்லாப் பரம் பொருளாய்

மிகல்குறைவொன் றின்றியெலாந் தானே யாய் வெளிப்பட்டுப்

பகர்வரிய நாதனுக்கே பல்லாண்டு கூறுதுமே

பங்கயத்தா வளித்தவற்குப் பல்லாண்டு கூறுதுமே


15.அரிபிரமன் முதலாய வமரரெலா மலமாக்கத்

தெரிவரிய செய்யசிவப் பிரகாச னெழுந்தருளிப்

பொருவதிலா நாயேனைப் பொருளாக்கி யுட்புகுந்து

யரிவதுசெய் தாண்டவற்குப் பல்லாண்டு கூறுதுமே

பார்ப்பரிய சோதிக்குப் பல்லாண்டு கூறுதுமே