தத்துவ ஞான மார்க்கம்

🙏 திருவந்திக்காப்பு

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

1.முருகலர்தார் வரைமார்பா மூவர் கோவே

முத்திநெறி யறிவிக்க நாயி னேற்குந்

தருகழலாய் பருகமிழ்தே தத்துவநற் சுடரே

தயாதரனே தவளநகைத் தையறிருக் கணவா

வரிகருகப் பெரிகியமர்த் தரிசிதறக் கணைகட்

டருளறமிக் கிருகுழைசெற் றவனிகொளப் பிறழுந்

திருநயனத் திருவனையா ரந்திக்காப் பெடுத்தார்

செய்தருளத் திருவுளமென் றிருநட நாயகனே


2.அருண்மேனி யமர்ந்தானே யானந்த மலையே

யணைந்தவர்தம் பெருவினையை யடர்த்தருளு மருந்தே

செருவாரும் பிறவியறுத் தெனையாண்ட தேனே

திரு விருக்கும் வரைமார்பா தெய்வவலஞ் சுழியாய்

பொரு வேலை யீடழித்துக் கயலினையும் வெருட்டிப்

பொங்கி யிரு குழைதுரந்து பொருதிளையோ ருயிரை

பரு குசின விழிமடவா ரந்திக்காப் பெடுத்தார்/p>

பழுதறுநின் றிருவுளமென் பரம்பொருளா முருவே


3.இலகுமறைக் கெழின்முனிவர்க் கிமையவர்கட் கரியா

யெனையடிமைக் கொளவெனையொத் திசையவு ருப் புனைவா

யுலகுயிர்தற் பரமதெனத் திகழ்வொடு நெற் றகனே

யுரையுணர்வைக் கழியமிகுத் தொளி ருசிவச் சுடரே

கலகவிழிக் கரியகுழற் குழல்சொன் மொழிக் கடினக்

களபமுலைக் கதிர்செய்நகைக் கனிப வளத் துவர்வாய்த்

திலகநுதற் றிருவனையா ரந்திக் காப் பெடுத்தார்

செய்தருளத் திருவுளமென் றேவர் கணா யகனே


4.பரிதிமதிக் கனல்புனல்கால் புரைதரைமற் றுயிராய்ப்

பகர்பொருளித் தனையுமலா நிகழறிவுக் கறிவே

சுருதிமுடிக் கறிவரியாய் கருதுமவர்க் கெளியாய்

சுரூபானந் தச்சுடரே தொழநினையார் புகுதுங்

கருவிருளிற் கருகிமலர்க் கழலிணைகட் புலனார்/p>

களியுலவிக் கடவுடிருக் கருணையெனப் பெருகித்

திருவொளியிற் றிகழ்விழியா ரந்திக்காப் பெடுத்தார்

செய்தருளத் திருவுளமென் றேவர்கணா யகனே


5.சாவாது மூவாது தனிமுதலா முருவே

தாழ்சடையோன் மால்பிரமன் றானறியா வறிவே

யாவாவென் றடியவர்கட் கருளளிக்கு மமிர்தே

யற்புதனே யகண்டமுமா யன்றிநின்ற சுரூபா

பூவாரு மடிகமலம் பூண்முலையுங் கமலம்

பொருந்துகர முங்கமலம் பொருகயற்கண் கமலந்

தேவாநின் றிருவனையா ரந்திக்காப் பெடுத்தார்

செய்தருளத் திருவுளமென் றேவர்கணா யகனே


6.குரவாநற் குணக்குன்றே யந்திக் காப்புக்

கோதிலமிழ் தக்கடலே யந்திக் காப்பு

வருவோடங் குருவல்லா யந்திக் காப்பு

வடைந்தவர்தம் பெருவாழ்வே யந்திக் காப்பு

மருவாருங் குழன்மடவா ரந்திக் காப்பு

வந்தெடுத்தார் மன்னவனே யந்திக் காப்புச்

சுரூபானந் தச்சுடரே யந்திக் காப்புத்

தூய்மறையி னுட்பொருளே யந்திக் காப்பு


தரவு கொச்சகக்கலிப்பா

7.ஊனாகி யூன்றுமிட முள்ளளவுங் கள்ளமறத்

தானான தன்மையினைத் தானளித்த தன்மையனே

தேனாரு மொழிமடவார் திருவந்திக் காப்பெடுத்தார்

கானாரு மலரலங்கற் கற்பகமே காண்பாயே


8.வானாடர் மால்பிரமர் மறைகலைக டெரிவரிய

ஞானானந் தச்சுடரே நாயேனை யாட்கொள்வாய்

மானாரும் விழிமடவார் வந்தந்திக் காப்பெடுத்தா

ரானாதிங்கவர் செய்பணி யருளாயென் னுடையானே


எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

9.அரவணியுஞ் சடைமுடியா யந்திக் காப்பு

வன்றயன்மாற் கரியானே யந்திக் காப்புப்

பரவடியார் விரவரியா யந்திக் காப்புப்

பாதகருக் கறிவரியா யந்திக் காப்பு

வரைமகடன் பங்குறைவா யந்திக் காப்பு

மாதேவ னேசிவனே யந்திக் காப்புச்

சுரர்பரவும் பெரியோனே யந்திக் காப்புச்

சுயம்பிரகா சப்பொருளே யந்திக் காப்பு


10.கன்றுகுணி லாயெறிந்தா யந்திக் காப்புக்

கற்றுணர்ந்தோ ருளத்துறைவா யந்திக் காப்புக்

குன்றுகுடை யாயெடுத்தா யந்திக் காப்புக்

கோகனகைத் திருமார்பா வந்திக் காப்பு

வன்றிலங்கை செற்றவனே யந்திக் காப்பு

வரவணையிற் றுயில்வோனே யந்திக் காப்பு

மன்றல்கமழ் துளவணியா யந்திக் காப்பு

மதகரிக்கொம் பொசித்தவனே யந்திக் காப்பு