தத்துவ ஞான மார்க்கம்

🙏 அனுபவரூபம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

1.முத்தியை மேவ நானிங்ஙன் முற்பட மேவி மொய் கழற்

பத்தியை மேவ மேனிகொண்டு பத்தர்கள் சூழவே புகுந்

தெத்தியெ னாவி வாரியுண்டு மெற்றுதி பேணு மீசனை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

2.தத்தம னோவி காரமென் றுதற்குண ராது வீடுறப்

புத்தக மோதி மாளுகின்ற புத்தர்முன் னான வாதிகள்

கத்தில் விழாத வாறுவந்து கைக்கொளுநாய னார் தமை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

3.பொத்திய வூன மாகிவந்த புற்புத மாகிநா னெனாது

சத்திய ஞான மானவின்ப தத்துவ மாகு வானென

வித்தக வேட மேவிவந்த மெய்க்குரு நாய னார்தமை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

4.அத்தனை வேறி லாதெழுந் தத்தமி யாத சோதிசிற்

சத்தென வேத மோதுதொந் தற்பொரு டானி தாமெனச்

சித்தநல் வேட மாகிவந்து செப்பிய நாயனார் தமை

யெத் தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

5.சித்த விகார மாகிநின்று சிற்சட வேறு பாடுசெய்

பெத் தமும் வீடு மாய்மயங்கு பித்தது தீரு மாறு சத்

சித்தென தாக மாகவொன்று செப்பிய தேசி கேசனை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

6.வித்தக மாக வேபரந்து மெய்ப்பொருள் போல மேதினி

கத்தலமேவு மூதையம்பு கட்டழல் சோம சூரியர்

சித்திய மான னாநினைந்த சித்திர காரி யார்தமை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

7.இத்தனை யோர்வு றாதநெஞ்சி லிட்டிடை மாதர் பாலுற

மத்தரின் வீழு மாறுகண்டு வைத்தெனை மாசில் சோதி மெய்த்

தத்துவமாக வேதகஞ்செய் சற்குரு நாயனார்தமை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

8.முத்தனை மூல நாடிலொன்றை முற்படு மாதி மூலனைச்

சுத்தனை மேனி தானிதென்று சுட்ட வொணாத சோதியைச்

சித்தனை வேறி லாவனந்த சிற்சுக லோக தாயியை

யெத் தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

9.ஒத்ததொவ் வாத தாயலைந்த வுற்பவ வேலை பாழ்பட

நித்த மெய்ஞ்ஞான மாமனந்த நிற்குண தீர மேறிநற்

பத்தர்கள் பாடி யாடவந்த பத்ம விராச பாதனை

யெத் தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே

10.தொத்தற மாடு வீடுமைந்தர் சுற்றமொ டாசை மாறி நற்

பத்திமெய்ஞ் ஞான மேவுசிந்தை பற்றி விடாது மேவுகின்ற

வுத்தம சீல ரோடும்வந்தெ னுச்சியின் மேவு பாதனை

யெத்தனை யூழி மாதவஞ்செய் திப்படி காண லாவதே