தத்துவ ஞான மார்க்கம்

🙏 பிரார்த்தனை

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

கட்டளைக்கலித்துறை

1.ஊனா யுயிரா யுணர்வா யுருகிக் கரைந்தொழியாத்

தேனாகி நின்றுதித் தித்திடு வாய்சிவ னேசிறியே

னூனா ருரோமஞ் சிலிர்ப்பவொண் கண்ணீ ரருவிதர

வானா துருக வடியே னுளமென் றணுகுவதே


2.அணுவுக் கணுவா யகண்டமு மாயழி யாமுதலா

யுணர்வுக் குணர்வா யொழியாது நின்ற வுனைநினைந்து

கணமுற்ற போது மமையாது கற்றா வெனக் கதறி

யிணையற் றழுது திரிதர வென்றெனக் கெய்துவதே


3.துவந்துவ மாகி வருகின்ற பற்றுந் துடைத்தினிய

நவந்திகழ் பாத நினைந்துள் ளுருகிநக் கோலமிட்டுக்

கவந்தியுங் கையி லிடும்பலி யும்மன்றி யொன்றுமின்றி

யுவந்தடியே னெய்த நீயரு ளாயெனக் குள்ளவனே


4.உள்ளவ னேயொன்று மன்பரல் லார்கட் கொளித்துநின்ற

கள்ளவ னேயுன் கடைக்கண் படாதவர் போலடியே

னள்ளலி லேநின் றழுந்தாத வண்ண மறிந்தடிமைக்

கொள்ளவ னேகுர வாகோதி லானந்தக் கொள்கையனே


5.கொள்ளும் பொருளனைத் தும்மழித் துக்குறை யாநிறைவா

யுள்ளும் புறம்பு மொழியாது நின்றொளி ரும்முணர்வே

யெள்ளும் பலியும் புறந்திண் ணையுமன்றி யொன்றுமின்றி

விள்ளும் படியரு ளாய்மெய்ய ருள்ளத்து மெய்ப்பொருளே


6.மெய்ப்பொரு ளேமெய் யடியார்கள் வாரி முகந்துகொண்ட

கைப்பொரு ளேகலங் காவறி வேகலங் கும்மவர்க்குப்

பொய்ப்பொரு ளேயென் றன்புந்தியில் வந்து புகுந்துநின்ற

செப்பொரு ளேசிறி யேனறி யேனென்கொல் செய்வதுவே


7.செய்வது செய்யாச் செயலது வாய்ச்சின மாசையென்னு

மையல தின்றி மறையறி யாத வடிவமதா

யையம தேபண்ணி யார்க்கும் பரமன்றி யாருமின்றி

வையமெல் லாம்பித்த னூமனென் றேச வருவதென்றே

\

8.வருவதும் போவது மாய்வரு கின்ற வழக்கறுத்துப்

புரிவதுஞ் செய்தென்னை யாண்டுகொண் டாய்பரி பூரணனே

பரிவதுன் பாலன்றிப் பாவையர் மாட்டென்றன் பையுணெஞ்சந்

திரிதரு கின்றதென் னோசிறியேன் செய்த தீவினையே


9.தீவினை யேன்சிறி யேனறி யேனென் றறிந்துகொண்டு

நீயெனை யாண்டன்று கொண்டதெனின் றுமந்நீயலையோ

நீவிடிலன்று பிடித்தவக் காடென தேயதன்றோ

நாயடி யேனறி யேனுடை யாய்நலந் தீமையுமே


10.மேவிடு கின்ற பதிதனமோடெவை யும்வெறுத்துப்

பாவிடுநூலிற் பரந்தெழு கின்ற பதைப்பு மின்றி

யோவிடு கின்ற கரணத்த னாயுள் விழித்துணையே

யாய்விடு கின்றிடு நாளடி யேற்கென் றருள்வதுவே


11.அருளது வேவடி வாகிப் புவியில்வந் தாண்டு கொண்டு

மருளதுதீர மறவாநினையா வரமருளித்

தெருளது செய்த சிவப்பிரகாசச் செழுங்கனியே

யருளது வேயுடை யாயழியா இந்த வூனினையே