தத்துவ ஞான மார்க்கம்
🙏 அருணெறி விளக்கம்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அறுசீர்க்கழிநெடிலடி யிரட்டை யாசிரிய விருத்தம்
1.ஆரிய னார்திரு மேனியை யங்ஙனளைந் திடுமாகாதே
யண்டமு மாயையு மங்கழி யாவறி வாயிடு மாகாதே
காரிய காரண மான வுபாதி கழிந்திடு மாகாதே
கற்பனை முற்று மிறந்த பெருங்களி கைப்படு மாகாதே
பாரி யல் பாகிய பந்த வினங்கள் பறிந்திடு மாகாதே
பாதக னேனை யுயக்கொள் பரன்கழல் பாடுது மாகாதே
யேரி யல் பாகிய வின்பவெள் ளம்பெரி தெய்திடு மாகாதே
யெந்தை சிவப்பிர காச னருட்க ணெழிற்கடை பட் டிடினே
2.அன்றென வாமென நின்றெழு சங்கைய ழிந்திடு மாகாதே
யாசை யினங்க ளடங்க மடிந்தழி யாவிடு மாகாதே
சென்று பரந்தெழு சிந்தை திரிந்து தெளிந் திடு மாகாதே
தேவர்க ளும்மறை யுந்தெளி யாதமை திண்ணம தாகாதே
துன்றி வரும் பொறி யும்பல னுந் துக ளாய்விடு மாகாதே
துன்பமு மின்பமு மாகு பலங்க டொலைந்தன மாகாதே
யென்று நிரந்தர வின்பம திங்ஙன மெய்திடு மாகாதே
யெந்தை சிவப்பிர காச னருட்க ணெழிற்கடை பட்டிடினே
3.தன்னழ காரடி யென்றலை மீது தழைப்பன வாகாதே
தானல தேது மலாதமை நெஞ்சு தரித்திடு மாகாதே
பொன்னணி யாரடி யிற்பொடி யேயுடல் பூசுது மாகாதே
பூசுர னார்புர ணத்திரு மேனி பொலிந்திடு மாகாதே
யுன்னிய பின்னுண ராமை யொளித்தமை யோர்வரி தாகாதே
யொன்றெனி லன்றி யொழிந்து கழன்றதொ ரொண்பொரு ளாகாதே
யென்னையென் னாலுணர் கின்றது தானுமி றந்ததி தாகாதே
யெந்தை சிவப்பிர காச னருட்க ணெழிற்கடை பட்டிடினே
4.கற்பனை யானவை முற்றினி லுஞ்செல் கருத்தறு மாகாதே
கங்குல் கழிந்துணர் வாகிய நண்பகல் கண் ணுறு மாகாதே
யற்ப மகத்துண ராமையில் வந்துள வானவை யாகாதே
யங்கையி லாமல கக்கனி போல் வதொ ரற்புத மாகாதே
பற்பல வாயெழு முற்றும் வெறும்பரி பூரண மாகாதே
பாவக மேதுமி லாவுள மேவு பரம்பொரு ளாகாதே
யுற்பவ முற்று மொழித்தவ ருட்டிற மோதுது மாகாதே
யொப்பில் சிவப்பிர காச னருட் கணி னுட்கடை பட்டிடினே
5.எல்லையி லூழி யெலாம்வரு நாளென தேகிய தாகாதே
யென்பணி யன்பரு டன்கொள வெந்தை யிசைந்திடு மாகாதே
கல்லை நெகுங்கனி செய்தெனையாளு கணக்கிது வாகாதே
காதன்மெய் யன்பர் கருத்து மிகக்களி கூர்தரு மாகாதே
யல்லி னுடன்பக லின்றி யருட்கட லாடுது மாகாதே
யண்ட மெலாமறி வாய்ந மகத்து ளடங்கிடு மாகாதே
சொல்ல திறந்த சுகக்கனி வாய்மகிழ் தூங்கிடு மாகாதே
சோதி சிவப்பிர காசன் விழிக்கடை துண் ணென வைத்திடினே
6.சம்புவி னன்பத மெங்கு நிறைந்து ததுப்பிடு மாகாதே
தம்மையு னாதவர் தம்மு ணிறைந்தது தாமய லாகாதே
கம்ப மெழுந்து கரங்கள் குவிந்துக ணீர்தரு மாகாதே
காரண னாரடி யார்நடு வெய்தல் கடைப்படு மாகாதே
யும்பரு மிம்பரு நின்றய ரொண்பொரு ளுள்ளொளி யாகாதே
யூழிதொ றூழியெ லாம்வரு மாயையொ ழிந்திடு மாகாதே
யெம்பர மின்றி யிருந்தவி ழின்னரு ளெய்திடு மாகாதே
யெந்தை சிவப்பிர காசனருட்க ணெழிற்கடை பட்டிடினே
7.கன்றிவ ருஞ்சம யங்கள்பொய்ம் மாயைசெய் கற்பித மாகாதே
கல்வியெ னும்மவ லக்கவ லைக்கடல் கையறு மாகாதே
நன்றியு மன்றியு மாமவை நாச மடைந்திடுமாகாதே
நாமுமெய்யன்பர்த மக்கடிமைத்தொழி னண்ணுதுமாகாதே
வென்று பகைத்திற மாயையும் வேரற வீசுது மாகாதே
வேண்டிய வாவிளை யாடியு முத்தி விளைந்திடு மாகாதே
யின்றித மும்மக மும்மறி வாகி யிலங்கிடு மாகாதே
யெந்தை சிவப்பிர காசனருட்க ணெழிற்கடை பட்டிடினே
8.பாடிய நான்மறை யீறொலி நின்று பணைத்திடு மாகாதே
பாவக மேது மிலாவுள மேவு பரம்பொரு ளாகாதே
கூடிய சாதி குலங்கள் குணங்கள் குலைந்திடு மாகாதே
கோரணி யாகிய கோமுழு தின்குடி கேடிது வாகாதே
தேடிய தாமல தின்றி யிருந்து திகைப்புறு மாகாதே
தேவர்க ளுஞ்சக முந்தெளி யாதமை திண்ணம தாகா தே
யேடியல் செங்கம லப்பத மென்றலை பெய்துவ தாகாதே
யெந்தை சிவப்பிர காச னருட்க ணெழிற் கடை பட்டிடினே
9.புண்ணிய பாவ வினைத்தளை யும்பொடி யாய்விடு மாகா தே
போக மெலாமினி மெய்யடி யார்கள் புணர்ச்சிய தாகாதே
பெண்ணலி யாணவை யன்றி யிருந்துள பேரெழி லாகாதே
பேயனை யேனையு மாள விசைந்த பெருந்தன்மை யாகாதே
விண்ணவர் தேடிட மேதினி மேல்வரும் விச்சைய னாகாதே
மேவரும் வேத விழுப் பொருள் வந்து வெளிப்படு மாகாதே
யெண்ண மெலா மடி யாரடி யேவிட லென்றெழு மாகாதே
யெந்தை சிவப்பிர காச னருட்க ணெழிற்கடை பட்டிடினே
10.அருக்க ருருத்திர ரிந்திரன் மாலய னாமவ ராகாதே
யலக்க ணுறக்கொடி யேனையு மாட வருட்கழ லாகாதே
திருக்கறி னும்முறி னுஞ்சிவ மாய்விடல் திண்ணம தா காதே
தேசிகனாரரு ளின்பெரு மைத்திற மாவதி தாகா தே
யுருக்கி யுருக்கி யுளுத்தைய ழித்தமு தூறிடு மாகா தே
யோதறி யேனுடை யாய்முறை யோவென வோ துது மாகாதே
யிருக்கை தனக்கிய லிப்படி யாகியிருக் கும தாகாதே
யெந்தை சிவப்பிர காச னருட்க ணெ ழிற்கடை பட்டிடினே