தத்துவ ஞான மார்க்கம்

🙏 அன்னைப் பத்து

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

கலிவிருத்தம்

1.தனியி லிருத்தித் தமைத்தந்த நாதா

ரினிய படியென்றா னன்னே யென்னு

மினியவர்க் கொப்பது மின்னமிர் தாம்பால்

கனியுள தன்றுகா ணன்னே யென்னும்


2.அச்ச மறுத்திங் கடிதலை வைத்தவர்

நிச்சம் புதியர்கா ணன்னே யென்னு

நிச்சம் புதிய நிமல னருளினை

யிச்சந்த மென்னவோ வன்னே யென்னும்


3.தோற்றுவ தெல்லாஞ் சுரூபமாய்த் தோற்றவோர்

மாற்ற மருளினா ரன்னே யென்னு

மாற்ற மருளிய வல்லபங் கண்டெனக்

காற்றவொண் ணாதுகா ணன்னே யென்னும்


4.நாரா யணனய னாடரி தானவர்

வாராது வந்தார்கா ணன்னே யென்னும்

வாராது வந்தென்னை வாழ்வித்த நாயனார்

சீரா ரருளென்னே யன்னே யென்னும்


5.விண்ணாதி தோன்றா விழியளித் தாண்டது

மெண்ணா திருவென்றா ரன்னே யென்னு

மெண்ணா திருந்த வியல்பை யிதுவென்ன

வொண்ணா துரைக்கவு மன்னே யென்னும்


6.ஏகமாய் நின்றாரை யிங்கிரண் டென்பவர்

மோக மணைவர்கா ணன்னே யென்னு

மோக மணைவரென் றெங்கண் முதல்வனா

ராகமஞ் சொன்னார்கா ணன்னே யென்னும்


7.தற்பதந் தொம்பதந் தாமாய வப்பத

மிப்பத மானவ ரன்னே யென்னு

மிப்பத மாய வியல்பை யிதுவென்று

செப்ப முடியுமோ வன்னே யென்னும்


8.ஊனா யுயிரா யுணர்வா யழிவேனைத்

தானாக வாண்டவா றன்னே யென்னுந்

தானாக வாண்ட தகைமை நினைதொறு

மானா துருகுமா லன்னே யென்னும்


இரண்டடியா யீற்றடி மிக்குவந்த கலித்தாழிசை

9.வேண்டிய வாவிளை யாடிட வீடளித்

தாண்ட வருளென்னே யன்னே யென்னு

மாதி யருளென்னே யன்னே யென்னும்


10.செய்யாமை யுஞ்செய லும்மறுத் தாண்டவா

வையா வதிசய மன்னே யென்னு

மழியா வதிசய மன்னே யென்னும்