தத்துவ ஞான மார்க்கம்
🙏 திருச்சாழல்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
நாலடித்தரவு கொச்சகக்கலிப்பா
1.இறையுணர்த்து மளவினிலெக் காலமுமெய் யுணர் வானோங்
கறையுடல மளவெனமுன் கலங்குவதங் கென்னேடி
நிறையவனல் விறகிருக்க நிகழ்மதன மில்லாக்காற்
சிறுகறையா னரித்துணல்போற் றிகழ்ந் திடுங்காண் சாழலோ
2.அருமறையா கமமநந்த முகங்களினா லுரைத்தாலு
மரியபரம் பொருளினையிங் கறியவொண்ணா தென்னேடி
யருமறையா கமமறைந்தென் னாரியனா யெழுந்தருளித்
திருவடியை யருளினல்லாற் றெரியாகாண் சாழலோ
3.மாத்திரையி லொருமொழியான் மாமுனிமீட்டு ணர்த்திடுமேற்
சாத்திரநூற் பார்ப்பதனாற் றருபயனென் சாற்றேடி
சாத்திரத்தாற் றற்பரத்தைத் தானிதென வறியவொண்ணா
வார்த்தையிது கலகலென வடித்திட லாஞ் சாழலோ
4.எங்குமொழி வறநிறைந்த வெல்லையிலாப் பேரின்ப
மிங்கொருமா னிடனாகி யெழுந்தருள்வ தென்னேடி
சங்கைகெட மான்கொடுமான் பிடித்தாற்போற் றானுடம் பாய்
நங்கணுடம் பழிப்பதற்கு நடந்ததுகாண் சாழலோ
5.ஒப்பரியா னொண்மலர்த்தா ளளித்தலுமே யுலகுயிர் மற்
றெப்பொருளுங் கண்டதிலை யென்செய்தவா றியம் பேடி
யெப்பொருளு மாய்நின்ற திணையடியே யாதலி னான்
மெய்ப்படவே கண்டவர்க்கு வேறிலைகாண் சாழலோ
6.உடம்பதிலா னுடம்பாகி யுடம்பழித்துத் தானாக்கத்
திடம்படவே மொழியுமதங் கென்பெறத்தான் செப் பேடி
யிடம்படவே மறுபயனங் கில்லாத புயன்மழை போ
லடங்கவழி யாப்பொருளா வருளினன்காண் சாழலோ
7.இப்படிவே றறவிறைவன் யாவையுந்தா னாயிருக்க
மெய்ப்படவே சமயங்கள் பிணங்குவதென் விளம்பேடி
செப்பிட வேதிமிரமுறு நயனத்தோர் மதிபலவா
மப்படியே யறுசமய மலத்திடுங்காண் சாழலோ
8.இருந்தபடி சிவமாகி யிருந்ததனை யெமக்களித்த
பெருந்தவற்குக் கைம்மாறு தானுண்டோ பேசேடி
யருந்தவற்குக் கைம்மாறொன் றிலையருளை நினைந்ததனா
லெரிந்தவழன் பெழுகெனவென் புருகிடல் காண் சாழலோ
9.வானோரு மண்ணோரு மறையுமறு சமயமுமங்
கேனோரு மலமாக்க வெமக்களித்த தென்னேடி
யேனோரு மலமாக்க வெமக்களித்த தெம்பெருமான்
மானாய சுதந்தரமே மற்றிலைகாண் சாழலோ
10.செய்யசிவப் பிரகாசர் சிறியோமை யாண்டருளி
யையமற நங்குலமுன் னாட்கொண்டான் காணேடி
யையனருட் டிறநினையே னழிந்துவிழுந் தெழுந்தலறேன்
மெய்ம்முழுதும் விதிர்விதிரேன் வினையேனான் சாழலோ