தத்துவ ஞான மார்க்கம்
🙏 பழித்துரைமாலை
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடி நான்காய்த் தம்மிலொத்துவந்த இரட்டைக்குறள் வெண்செந்துறை
1.விரித்தகண்ணிற் றிரித்தகண்ணில் விழித்தகண்ணி லெல்லா
மிகுத்துருவி நின்றேயும் விளம்பவொண்ணா வீசன்
றரித்துவந்த திருமேனி தன்னையெனக் களித்துத்
தானேதா னாக்கவந்த தன்மைவேடங் கிடிகொள்
2.உரைத்தபொருள் யாவையிலும் புரைத்தலின்றி நின்றே
யுரையுணர்வா லுணரவொண்ணா வொளிமிகுத்த வொருவன்
வரைத்துவந்த திருமேனி மண்ணின்மயக் கறுத்து
மலர்க்கழல்கள் சூட்டவென்றே வந்தவேடங் கிடிகொள்
3.தோன்றிநின்ற பொருள்க ளெல்லாந் தொட்டுநின்றே யாவுந்
தோன்றாமை தோன்றிநின்ற தொன்றலொடு வந்து
வூன்றிநின்ற வுணர்வுதன்னை யுணர்வானி லிருத்தி
யுள்ளநிறங் கொள்ளவந்த கள்ளவேடங் கிடிகொள்
4.திகழ்ந்துநின்ற பொருள்களெல்லாஞ் செருமிநின்றே யாவுந்
தெரிவரிய பெரியபிரான் றீர்ந்துவந்த கோல
நிகழ்ந்துவந்து முகந்தரித்து நிகழ்வுகெட முழுத்தி
நிகழ் வானி னிறங்கவர நிகழ்ந்தவேடங் கிடிகொள்
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள்வெண்செந்துறை
5.உருத்தவவ்வ விடந்தோறு மொப்பிலாப்பெருங்
கண்ணே யுதய மாக்கிக்
கருத்தற்ற விடந்தோறுங் காண்பானா
யெனையங்கே கரந்தா னென்னே
6.கெட்டவவ்வ விடந்தோறுங் கேடில்லாப்
பெருங்கண்ணே கெழுமு வித்துப்
பட்டவென் றுயர்தீரப் பழையதன்
னிலையிலே பதித்தா னென்னே
7.உன்னரிய தன்னமே யென்னுயிரை யொடுக்கி
யொழியாமை யெவ்விடத்து மழியாமை காட்டித்
தன்னடியே னாமாறு பின்னையெனக் களித்த
தத்துவனார் தங்கருணை சாற்றலா மளவோ