தத்துவ ஞான மார்க்கம்

🙏 தோழிக்குரைத்தல்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

1.முத்தே வருந்தேடு மூலப் பொருடன்னை மொய்குழ லாயேடி கேளாய்

பித்தா முபாதிப் பெருந்துயர்ப் பவ்வப் பிறவிப் பிணிக்கோர் மருந்தா

மத்தாடு மைம் புலன் றன்னின் வழிமாறி மனவுரை மாண்டவருளே

சித்தா யொளிருஞ் சிவப்பிர காசர் திருவடித் தாமரை காணே


2.சொல்லிய ஞானிக் கினிப்பிறப் பில்லாமை தூமொழி யாயேடி கேளாய்

நெல்லு முதலாம் விதைக ணெருப்பில் வறுத்தான் முளையாதாற் போல

வல்லும் பகலு மறவே சுடரு மறிவாம் வடவை யெரியில்

வெல்ல வரும்பவ வித்தா மவிச்சையும் வேவ லான் மேன்முளை யாவே


3.துய்யமெய்ஞ் ஞானிக் கிருவினை கூடாமை தோகை நல்லாயேடி கேளாய்

பொய்ய வுடற்செயல் புத்துடம் பாதலாற் போந்த வவிச்சையற் றுத்தான்

பொய்யாய வூனி லறிவுக்கு முன்புள்ள விச்சையோ டேவெந் தறு மான்

மெய்ய வறிவால் விளங்கலான் மேல்வினை மேவாது வெந்தறுந் தானே


4.கோதற்ற ஞானி யிருந்திடுந் தன்மையைக் கொங்கைநல் லாயேடி கேளாய்

வாதற்ற மாமறை முற்றுஞ் சிரங்களால் வந்தது வாழ்த்திநின் றேத்தி

யோதற் கரிய வுணர்வின்ப மேயா யொருகற் பனைகளு மின்றி

யாதுக்கு மங்கங் கதுவாகி யன்பர்க் கறிவா யிருந்திடுந் தானே


5.மெய்ஞ்ஞானி கட்கு விரதங்கள் கூடாமை மெல்லிய லாயேடி கேளா

யஞ்ஞான மாயையைச் சுட்டுக் கொடல்ல தறிவுதி யாது தித்த

விஞ்ஞான மாயையி னாலதன் காரியத் தாகும் விரத மயறான்

மெஞ்ஞான மாகி விளங்கலான் மேல்வினை மேவலொன் றாலுமே வாதே


6.உரைமன மாண்டுள்ள வொண்கழ லான்றன்னை யொப்பிலா தாயேடி கேளாய்

புரைநன வோடு கனவு சுழுத்தி புகலுந் துரியமுன் னாக

வரைமுழு துங்கழன் றேபரத் தோடுயிர் வையமுங் கண்ணில் விழுங்கிக்

கரையிறந் தின்பக் கடலா யிருந்திடுங் கண்ணே கண் ணாயிடல் காணே