தத்துவ ஞான மார்க்கம்
🙏 அறுதியுரைத்தல்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள்வெண்செந்துறை
1.இந்த வுடலம் விடுவதன் முன்விரைந் திப்பவந் தீரா விடின்
வந்துவந் துபல னாகிப் பிறந்தெய்த்து மாண்டே விடுவர் கிடீர்
2.சாதல் பிறத்த லெலுங்கேடு தானறத் தம்மை யுணரா விடிற்
போதல் வருதலாற் பொன்னூச லாட் டொரு காலத்தும் போகா கிடீர்
3.உம்மை யுணர்ந்து பவச்சுடு காட்டை யொப் போடே கழலா விடி
னிம்மை மறுமையி லேபிடித் தும்மை யெல்லாம் படுத்துங் கிடீர்
4.ஊனை வடிவென்றல் விட்டுத்தன் னுண்மையை யுள்ளவா காணா விடின்
மானு மழுவுமாய் வந்தாலும் வன்பவ மாளா திருக்குங் கிடீர்
5.இப் பிறப் பில்லே தமையுணர்ந் தெல்லாப் பிறப்பு மொழியா விடிற்
றப்பி யுடல் கொண்டு கொண்டு சதங்கையுங் காலுமாய் நிற்பர் கிடீர்
6.ஆறி யறிவே வடிவென் றிருந்தல்ல லெல்லாங் கழியாவிடிற்
சூறைகொண் டேமாயை யும்மையூ னாக்கித்தோற் பாவைக்கூத் தாட்டுங் கிடீர்
7.மேலா லறிவோ மெனதே விரைந்தும்மை மெய்கண்டு கொள்ளாவிடிற்
கோலா கலஞ்செய்து வந்தும்மை யாசாபைசாசங் குமைக்குங் கிடீர்
8.பந்தசங் கற்பனை யிற்றலை வைத்துப் படாதெலாம் பட்டிடாதே
யெந்தை கழல்சூடி னெங்கெழி லென் ஞாயி றென்றிருக் கல்லாங் கிடீர்
9.நாடிக் குரவன் கழறலை வைத்துண ராதூனை நானென் றிடிற்
கூடிப் பெருஞ்சுற்ற மத்தின் றலை யிலே கொள்ளியை வைக்குங் கிடீர்
10.மெய்யே யுரைத்த வறுதிசொற் கொள்ளார் விலங்குவே தாள மொப்பா
ரையோ பலங்கடந் தேற லோர் காலத்து மாணையே யில்லை யில்லை