தத்துவ ஞான மார்க்கம்
🙏 அருமையுரைத்தல்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள்வெண் செந்துறை
1.நான்மறை யோதிப் பொருளுரைத்து நாடறியக் கல்வி சாற்றினாலுந்
தானது வாகை யரிதுகாணுஞ் சலிப்பற நிற்கை யரிதுகாணும்
2.இணங்காமை யெல்லா மறத்துறந்தே யிருட்டற வேதாந்த மோதினாலும்
பிணங்கா திருக்கை யரிது காணும் பேரின்ப மாகையரிது காணும்
3.எல்லை யிலாகம மேறவோதி யேதுக்க ளெல்லா மியம்பினாலு
மல்ல லறுக்கை யரிதுகாணு மறிவாயி ருக்கை யரிதுகாணும்
சைனசந்நியாசம்
4.பற்றற விட்டுத் தலைப றித்துப் பாணியைப் பண் ணிப் பயின்றக்காலு
முற்ற நிலைநிற்கை யரிதுகாணு முடிய நிலைநிற்கை யரிதுகாணும்
5.ஆறுசமயப் பொருளுங் கற்றே யங்குள்ள தர்க் கங்கள் சாற்றினாலும்
மாறியிருக்கை யரிதுகாணு மது விதுவாகை யரிது காணும்
6.வேறு பிறிதிலா மெய்ம்மைதன்னை வித்தாரமாக விளம்பினாலு
மாறியிருக்கை யரிதுகாணு மவிரோத மாகை யரிதுகாணும்
7.தேறி யுலக மனைத்தினையுஞ் சிற்பர மாகநாஞ் செப்பினாலு
மாறியிருக்கை யரிதுகாணு மவிரோத மாகை யரிதுகாணும்