தத்துவ ஞான மார்க்கம்

🙏 வளவியுடன்படுத்தல்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள்வெண் செந்துறை

1.இமைத்து விழிப்பதற் கில்லைவாணா ளிதிலுள்ள துன்பங்க ளெண்ணில்கோடி

யமைத்துனைப் பார்த்தல் லலறுநெஞ்சே யாண்டவ னென்றன் றரற்ற வாரீர்


2.மின்னிலு நொய்திவ் வுடம்பின்றன்மை மேன் மேலும் வந்திடும் வேதனைக

ளன்னதே யிவ்வுடம் பாவதானா லாய்வானை யெப்பேரது மாயவாரீர்


3.இல்லாது வேண்டினும் வந்திசையா வுள்ளது தள்ளினு மூட்டுமானா

லெல்லாம் வரக்கண்டோ ரிச்சை யின்றி யிருந்த படியே யிருக்க வாரீர்


4.என்னாணை கேளிஃ தொன்று நெஞ்சே யேதேனுஞ் செய்தினி யுள்ளகாலந்

தன்னாக நாயோமை யாண்டு கொண்ட தாள்களை யோவாது சாற்ற வாரீர்


5.பொன்று முடம்பு பொருந்துமின்பம் புன்னுனை நீராகும் புன்மைநெஞ்சே

யென்றபி னெல்லாம் வீழ விட்டே யிருந்த படியே யிருக்க வாரீர்


6.ஒன்றெனி லாயிர கோடிதுன்ப மோய்வின்றி யேவரு மோரினெஞ்சே

யொன்றுமற் றுள்ளநா மாயிருந்தே யுளநாள் கழிக்க வொருப்ப டீரே