தத்துவ ஞான மார்க்கம்

🙏 ஏவலுக்கிசையாக்கரணத்திகழ்ச்சி

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அடிநான்காய்த் தம்மிலொத்துவந்த இரட்டைக் குறள்வெண்செந்துறை

1.ஓவாதே பிறந்திறந் துழிதரு மென்னை

யோகோ வென் றருள்செய்யு மொளியாருஞ் சுரூபன்

றேவா நற் றிருமேனி திளையாத கண்க

ளவையெல்லாங் கண் ணல்ல செந்நீர்பாய் புண்ணே


2.தடையில்லைத் திருவாசல் சகலமுஞ் சுரக்குந்

தன்னையே தரவல்ல தலைவள்ளல் சுரூப

னொடிவறக் கொடி கட்டி யிருக்கவு முயிர்க

ளோடிவந் தடையாத வுணர் வின்மை யென்னே


3.கல்லாத முழுதையுங் கற்பித்தோர் மொழியாற்

கடையோமைப் பொருளாகக் கடைக்கண் வைத்தளித்த

வல்லாளன் சுரூபன்சீர் நினையாத மனந்தான்

வன் பாறை யிரும்பன்று வலிதீது வலிதே