தத்துவ ஞான மார்க்கம்
🙏 ஏவலிசைத்தல்
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள் வெண்செந்துறை
1.கேளாய் செவியோங் கீழ்மைகண்டும் புகுந்தாண்டவன்
மாளாத சீர்த்தியே மன்னு மொலியெங்கு மாகவே
2.உடலேநீ மேவும் பரிசெலா நம்மை யுடையவன்
றிடமாந் திருமேனி யானதிண் மைகண்டுந் தேராய்நீ
3.வாராய் நயனமே வாராதே வந்தெம்மை யாண்டானைப்
பாராய் முழுது மவனாகி நின்ற பரிசினை
4.நாவேநீ யுண்ணுஞ் சுவையெல்லா நம்மை யுடையவன்
றேவா ரடியாய திண்மைகண் டுண்ணவுந் தேராய்நீ
5.வாச முழுதுமவ் வாசாம கோசர மானவ
னாச மிலிகோல மானநன் மைகண்டு நாசியே
6.வாராய்பிர விர்த்தியே வாராதே வந்தெம்மை யாண்டவன்
சீரார் திருப்பணி யாகவே செய்யாய் செயலெல்லாம்
7.ஓராய் நிவிர்த்தியே யொன்று மொழியா விறைவரைச்
சேரா தவருடன் சிந்தை கனவிலுஞ் சேராதே
8.மனமேநீ சங்கற்ப மாக நினையும் பொருளெல்லாங்
கனமாம் பரஞ்சுடர் கற்பனை யாகக் கருதாய்நீ
9.சித்தமே நீசிந் தனையாய் நினையும் பொருளெல்லாம்
வைத்த மலரடி யல்லதின் மைகண்டு வாழாய்நீ
10.ஐய மறவிட்டறுதி யிடுமிப் பொருளெல்லாஞ்
செய்ய சிவப்பிர காசரென் றேதெளி வாய்மதீநீ