தத்துவ ஞான மார்க்கம்
🙏 நற்குறி
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள் வெண்செந்துறை
1.பாரும்பரனா ரருளவருங்குறி பாதாதிகேசமுங் கம்பித் தோர்வுமிழந்து
வுரோமமுகிழ்த்து வுள்ளமுந் தீமெழு காய்விடுமே
2.கலையும்வளையுடன் கற்புமிழந்தறி மாலுங்கரை யறுமே
யலையுங்கடலே ழணுவெனுமன்பர்பா லையன் வருங்குறியே
3.என்புமுருகி யெதிரிலின்பவ்வெள்ள மெங்கும்ப ரந் திடுமே
தன்பெருந்தன்மைதன் னாலுமறிவொண்ணாச் சம்பு வருங்குறியே
4.ஊனுமுயிரு முணர்வுமுணர் விடை யாதுமுருகி யொன்றாய்த்
தேனுமமிழ்துமாய் நின்றுதித்தித்திடுஞ் செய்யோன் வருங்குறியே
5.சதுரைமறந்தறி மால்கொண்டுதன்னையுந் தானிழைந் தோவியம்போ
லெதிர்வுங்கழிவுமற் றின்பமீதூருமா லெந்தை வருங்குறியே
6.விச்சையவிச்சை விவேகாவிவேகங்கள் வீடுபற் றுங்களவிற்
றுச்சதுணர்த லிலாமைபோற்றோன்றாது தூயோன் வருங்குறியே
7.உரையுந்தழுத்துள மும்முருகிக்கண்ணு மொப்பிலா றாகியோடும்
புரையுமறநினைந் தின்பமீதூரும் புரணன் வருங்குறியே