தத்துவ ஞான மார்க்கம்

🙏 பல்லி

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது

அடிநான் காய்த்தம்மிலொத்துவந்த இரட்டைக்குறள் வெண்செந்துறை

1.அருவுருவ லானுருவ மாகிவரு மாகி

லாதிமறை தேடரிய வண்ணல்வரு மாகிற்

சுரூபனெனை யுடையநல தோழன்வரு மாகிற்

றுளக்கமற நல்லதிசை சொல்லுசிறு பல்லி


2.ஓடுமன நம்மினுட னுறவுசெயு மாகி

லுள்ளநிலை மெள்ளவுணர் வாகிவரு மாகி

னாடுமிட மெங்குமறி வாகிவிடு மாகி

னல்லகுர னல்லதிசை சொல்லுசிறு பல்லி


3.செப்பமுடி யாதபொருள் செப்பவரு மாகிற்

சிலுப்பற விருத்தவல தீரன்வரு மாகி

லிப்பவ மறுத்தகழ லிங்ஙன்வரு மாகி

லின்னமொரு கால்வரவு சொல்லுசிறு பல்லி


4.ஆறவடி வைக்கவல வாதிவரு மாகி

லருஞ்சிவ மெனக்கெளிய வையன்வரு மாகில்

வேறுமொழி யாவிரகன் வீதிவரு மாகின்

மீளவொரு கால்வரவு சொல்லுசிறு பல்லி


5.இரவுபக லொழியவரு மிரவிவரு மாகி

லின்பவடி வானசிவ மிங்ஙன்வரு மாகில்

விரவியெனை யாளவல் வீரன்வரு மாகின்

மீளவொரு கால்வரவு சொல்லுசிறு பல்லி


6.என்னுளமிழ் தூறிநிறை யின்பம்வரு மாகி

லென்றுமொழி யாதபர மேசன் வருமாகின்

மன்னுமுணர் வாகிய மணாளன்வரு மாகில்

வாழவொரு கால்வரவு சொல்லுசிறு பல்லி


7.உம்பர்க டமக்கரிய வும்பன்வரு மாகி

லுரையுணர் விறந்தவுணர் வுருவன்வரு மாகி

லெம்பர மறத்திகழு மின்பம்வரு மாகி

லின்னமொரு கால்வரவு சொல்லுசிறு பல்லி