தத்துவ ஞான மார்க்கம்
🙏 கொடி
குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது
அடியிரண்டாய்த் தம்மிலொத்துவந்த குறள் வெண்செந்துறை
1.கருவார் புழூச்சிறைக்கே கடையேன் புகாதவண்ணங்
குருவாகி வந்தான்வரிற் கொடியே யுவகை கூறே
2.மாறும் பிறவிமயன் மாத்திரையொன் றிற்றீரக்
கூறும் விரகன்வரிற் கொடியே யுவகை கூறே
3.தோலான் மறைத்தமலச் சுமையினைகா னென்கின்ற
கோலாகலந் தீர்த்தான்வரிற் கொடியே யுவகைகூறே
4.தொண்டில்லை யல்லர்நாயேன் றொழும்புகந்தாண்டு கொண்ட
கொண்ட லெழுந்தருளிற் கொடியே யுவகை கூறே
5.நற்றேவர் நின்றுணங்க நாயேனை யாண்டகோலங்
குற்றேவல் கொள்ளவரிற் கொடியே யுவகை கூறே
6.நாமாதீத மானதன்னை நாயேற்கு நல்கவந்த
கோமா னெழுந்தருளிற் கொடியே யுவகைகூறே
7.உரையுணர் வற்றதொன்றை யுள்ளங்கை நெல்லிபோலக்
உரையுணர் வற்றதொன்றை யுள்ளங்கை நெல்லிபோலக்
8.திண்டாடத் தேவரெல்லாஞ் சிறியேனைக் கண்டுகொண்டு
கொண்டாள வந்தான்வரிற் கொடியே யுவகைகூறே
9.ஞாலமும் விண்ணுகிற்க நாயேனை யாண்டுகொள்ளக்
கோலமாய் வந்தான்வரிற் கொடியே யுவகை கூறே
10.நெடியானு மயனுநிற்க நேயமிலா நீசனெனைக்
குடியாக வாண்டான்வரிற் கொடியே யுவகைகூறே
11.கோகிலக் குஞ்சுதம் பிள்ளைபோலுங் குறித்தே வளர்க்குங் குலக்கொடியே
யேகநற்சோதியை யென்னை யாளு மெம்பிரானை யிங்கெழுந் தருளென்னே