🙏 அருட்கழல் விளக்கம்

குரு துரிய மகான் தத்துவராயர் அருளியது


அருட்கழல் விளக்கம் - அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

1. புகழ்மி குகனலி சிறக்கவோ புவியகம் விளைவு பெருக்க வோ, 
மகிழ்தரு முவகை யுயிர்க்கெலாம் வளமிடை யறமிக வைக்கவோ, 
தகுமறை மறையவர் மிக்கதா பதர்சுரர் பசுவின முற்றெலா,
மிகமிகு பெருவள முய்க்கவோ விறை கழ லடியர் விளக்கலே.

2. மனுநெறி யுலகில் விளைக்கவோ மவுனரு  ளுலகின் முழுத்தவோ,
நினைவரு முலகி லுயிர்க்கெலா நிலவிய விதம தளிக்கவோ, 
வுனவரு முயிர்க ளுளத்தெலா மொழிவரு புத்த முணர்வொளிர் விக்கவோ,
வெனதிறை கமலமலர்ச் செய்தா ளெழில்பெற வடியர் விளக்கலே.

3. அருளற மெவையும் விளக்கவோ வறுசமயமு மெய் விளக்கவோ,
பொருணெறி யெவையும் விளக்கவோ பொழி லவை முழுதும் விளக்கவோ, 
வெருளறு சிவம தெறித்து நேரிலகிடு மியல்பு விளக்கவோ, 
வெருளறு கமல மலர்ச் செய்தாள் விரைவுட னடியர் விளக்கலே.

4. தொலைவினை முழுது மறுக்கவோ துயருறு பிறவி தொலைக்கவோ, 
வலைகெழு மவலமறுக்கவோ வளவறு மழகு விளைக்கவோ, 
நிலையுறுமடியர் நினைத்தசீர் நிகழ்தரு முழுது முடிக்கவோ, 
வெலையறு சுரூபன் மலர்ச்செய்தா ளெழில் பெற வடியர் விளக்கலே.

5. கதுவிய மயல்கள் கலுழ்ச்சிநோய் கடுகிய வெகுளி கழற்றவோ, 
விதமுறு முலக மழித்துளே மிகுதருபுரண மளிக்கவோ, 
விதமுட னகமு மழித்தசீ ரெழில்பெற விசைய விழித்துநேர், 
பொதுவுறு நிறைவ தளிக்கவோ புனிதன தடிகள் விளக்கலே.

6. அறைவுறு சமய வகைக்கெலா மமைவுறு சமைவை யளிக்கவோ,
நிறைவொடு குறைவ திறக்கவோ நிலவிய நிறைவை நிகழ்த்தவோ, 
விறவறு பரம் சுகத்தையே யெவருளுமிலக முழுத்தவோ, 
செறிதரு குரவன் மலர்ச் செய்தா டிகழ்தர வடியர் விளக்கலே.

7. அலைதரு கலைக ளகற்றவோ வமைவெனு மிரத மளிக்கவோ,
விலதுள தடைய விறக்கவோ வெழின்மிகு மொருமை யெறிக்கவோ, 
நலமிகு மடியர் நினைத்ததாய் நவையற நிகழுநலத்தையே, 
யிலகிட வெளிதீனளிக்கவோ விறைகழ லடியர் விளக்கலே.

8. அசைவறு முனிவர் தவத்திலே யழலோடு புனல்கள வற்றுளே, 
வசையற முயலும் வருத்தமார் வளர்தரு துயர மரிக்கவோ, 
நசைகொடு விடய விடத்துளே நடலைசெ யெனையு நினைத்துநே, 
ரிசைதரு கழல்க ளளிக்க வோ விறைகழ லடியர் விளக்கலே.

9. அதிசய மிகவு மெனக்குமா லயன்முத லமர ரயர்ப் பொடே, 
யிதமக மதனி லிளைக்கவேயிடருறு மவலவெனக் குளே,
யுதிசெயிவ் வுலக முயிர்க்கண்மே லுளபர முழுது மொளித்தசீர்,
நிதியினை நிகழ வளிக்கவோ நிமலன தடிகள் விளக்கலே.


// --- முடிவுற்றது --- //